கிருபானந்த சுவாமிகள் அருளும் உடலைப் போற்றும் முறைகள்

09 July 2018
K2_ITEM_AUTHOR 

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிழுக்கு முகமாக அமர்ந்து ஆண்டவனை வணங்க வேண்டும்.

பின்னர் சிறிது தூரம் மலஜல நிவர்த்தி செய்ய வேண்டும்.

மலச்சிக்கல் உள்ளதாயின் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் பருகி, பின் சிறிது நேரம் உலாவினால் மல நிவர்த்தியாகும்.

ஆலம் அல்லது வேலம் குச்சியில் பல் துலக்க வேண்டும்.

தினமும் நீராட வேண்டும்.

உடலழுக்கைக் களைய நீராடுகையில் "நீரளித்த பெருமானே! உள்ளத்தின் அழுக்கைக் கழுவ உம் தியானத்தை என்றும் அருள்க"என வேண்டிக் கொண்டே நீராடுதல் நல்லது.

தலைக்கு குளித்தலே நலம். தலையை நீக்கி நீராடக் கூடாது. காலையில் நீராடுதல் நல்லது.

துவைத்த உலர்ந்த ஆடையால் துவட்டிக் கொள்ள வேண்டும்.

கடவுள் வழிபாடு முடித்தபின் சிற்றுண்டி அருந்தி, தொழிலில் ஈடுபட வேண்டும்.

உணவருந்தும் போது அவசரமில்லாது, நிதானமாக நன்கு நொறுங்கத் திண்ண வேண்டும்.