நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்


நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. நாளை காலை 8.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும், 22-ந் தேதி காலை சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 23-ந் தேதி காலை வெள்ளி ரி‌ஷப வாகனங்களில் வீதி உலா, 24-ந் தேதி காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும் இரவு வெள்ளி சப்பரத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது.

25-ந்தேதி காலை சுவாமி அம்பாள் பல்லக்கிலும் (தவழ்ந்த கோலம்), இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உட்பிரகாரம் உலா வருதல் மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதி உலா, மதியம் 12 மணிக்கு சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி எழுந்து வீதி உலா, இரவு தேர் கடாட்ச வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா வருகின்றனர்.

27-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 1-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடா உபசார விழா தீபாராதனை நடக்கிறது. தினமும் மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



Leave a Comment