தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


உலக பிரசிதிப்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவிலில் பிரச்சித்தி பெற்ற சித்திரை திருவிழா மிக பிரமாண்டான முறையில் 18 நாட்கள் நடத்தப்படும். இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் மண்டபமான மேலவீதிக்கு வந்தது.
அங்கு தியாகராஜர் - கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து காலை 5.40 மணிக்கு தேர்வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலையில் அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவ.. சிவ... ஓம். நமச்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் தஞ்சையில் உள்ள மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜ வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் முன்பு மேளதாளங்கள் மற்றும் தப்பாட்டம், கோலாட்டம் குழுவினர் இசை முழுங்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து சென்றது.



Leave a Comment