சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா


சிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் இந்திய பாரம்பரிய உடையுடன் சிறப்பு விருந்தினர் பிரதமர் லீ சியென் லூங் உட்பட பல அமைச்சர்களும் சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
164 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
நாலரை மில்லியன் வெள்ளி செலவில் சில முக்கிய மேம்பாடுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற குடகுழுக்கு விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமூகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ, மூதாதையர் விட்டுச்சென்றதை ஒவ்வொரு தலைமுறையினரும் பராமரித்து, மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூர் இந்து சமூகத்துக்கு பெருமாள் கோவில் ஒரு முக்கியமான இடம் என்றும், பக்தர்களின் தாராள நன்கொடையாலும் ஆலய நிர்வாகத்தின் தலைமைத்துவத்தாலும் இந்து சமூகத்தாலும் இந்த குடமுழுக்கு விழா சாத்தியமானது என்றார் லீ.



Leave a Comment