சபரிமலையில் சிறப்பு தரிசன முறை ரத்து


சபரிமலை கோவிலில் சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கினால், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் முறை இருந்தது. இந்தநிலையில், திருவனந்தபுரம் நந்தன் கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி அளிப்பவர்கள், கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யலாம் என்ற முறை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரசீது வழங்கப்பட்டவர்கள் சிறப்பு தரிசன வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சபரிமலை மற்றும் பம்பையில் தனித்தனியாக உள்ள மெஸ் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment