முருகனின் திருமேனி வியர்கும் அதிசயம்....


நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சூரனை சம்ஹாரம் செய்வதற்காக இத்தலத்தில் உள்ள பார்வதி தேவி, சிங்காரவேலவருக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி அம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. 64 சக்திபீடங்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். போருக்கு புறப்பட்டு முன்பு இங்குள்ள அம்மன் வேல்நெடுங்கண்ணியிடம் முருகன் வேல் வாங்கும் போது அவரது நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பி இருக்கும். கந்தசஷ்டி விழாவில் முருகன், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது இன்றும் அந்த அதிசயத்தை நாம் காணலாம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்காரவேலர், தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளி வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேலே பெற்று சூரபத்மனை வதம் செய்தார்.



Leave a Comment