அரவான் கதை


வீரம், விவேகம், அழகு உள்ளிட்ட 32 லட்சணங்களைக் கொண்ட ஒருவரை களபலிக் கொடுத்தால் மகாபாரத போரில் வெற்றி கிடைக்கும் என்பதற்காக 32 லட்சணங்களையும் கொண்ட அரவான் என்ற இளவரசனை பலி கொடுக்க பஞ்ச பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில், தான் இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அரவான் ஆசைப்படுகிறார். சாகப்போகும் ஒருவருக்கு யார் பெண் கொடுப்பார்கள் என பஞ்ச பாண்டவர்கள் கவலையடையும் போது கிருஷ்ண பகவான் அழகிய பெண் உருவம் கொண்டு அரவானை திருமணம் செய்து கொள்கிறார்.
பின்னர், அரவான் களபலி கொடுக்கப்படுகிறார். இதனையடுத்து பெண் உருவத்தில் இருந்த கிருஷ்ணர் கணவனை இழந்த பெண்ணுக்கு செய்யும் சடங்குகளான கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அறுத்து, வெள்ளை சேலை உடுத்தி விதவை கோலத்தை ஏற்றுக் கொண்டார்.
இந்த புராண வரலாற்றை நினைவுக்கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள், விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.



Leave a Comment