விநாயகரை...முதலில் வழிபடுவது ஏன்?


வாழ்க்கையில் முக்கிய தேவையாக இருக்கும் நலத்திற்கும், வளத்திற்கும், சித்திக்கும், புத்திக்கும் க்ஷேம லாபத்திற்கும் விநாயகப் பெருமான் தான் அதிபதி. அவரை வணங்கினால் எந்த விக்கினத்தையும் எளிதில் தீர்த்துவைத்துக் காப்பார் என்பது ஜதீகம்.

விநயாகப் பெருமான் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் உட் பொருளும் வடிவமுமாய்த் திகழ்கின்றார்.

'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துகளால் ஆனது - அவற்றுள்

'அ' என்பது படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவைக் குறிக்கும்.

'உ' என்பது காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவைக் குறிக்கும்.

'ம' என்பது அழித்தல் தொழிலுக்குரிய சிவனைக் குறிக்கும்.

இவை மூன்றிற்கும் மூலமாக விளங்குபவரும், முத்தொழில்களின் அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் விளங்குபவருமான விநாயகரை முதலில் வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.



Leave a Comment