குரு பெயர்ச்சி 2017: 12 ராசிகளுக்கான பலன், பரிகாரங்கள்

05 September 2017
K2_ITEM_AUTHOR  குருபரன்

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள்  ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில  பாவ கிரகங்களாகவும் உள்ளன.

ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.

இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய,  விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் இடம்பெயர்ந்துள்ளார். 

இந்த குரு பெயர்ச்சியால் குருபகவான் 12 ராசிகாரர்களுக்கு யாருக்கு நல்ல பலன்களை தருகிறார். யார் யார் பரிகாரம் செய்ய வேண்டும் குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம்  உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம். 
இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசி காரர்களுக்கு யோகம் தரக்கூடியது. காரணம் குருபகவானின் பார்வை இம்முறை இந்த மூன்று ராசிகளின் மீது படுகிறது. 

தனுசு, கன்னி, மத்திம பலன்களை அடைகின்றனர். கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்திலும், தனுசு ராசிக்கு 11ஆம் இடத்திலும் குருபகவான் அமர்கிறார். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பரிகாரம் செய்தால் பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

 

மேஷம் - யோகம்

குரு பகவான் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார்.  அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குரு பகவால் அல்லல்பட்ட மேஷ ராசிகாரர்களுக்கு இனி  நல்ல காலம் பிறக்கிறது. 2018 அக்டோபர் 3 வரை பலன்கள் அருள்கிறார் குருபகவான். 

மேஷம் 7வது ஸ்தானம். குரு பகவான் 7ஆம் இடத்தில்  அமர்ந்துள்ளார். குரு பகவான் ராசிக்கு  2, 5, 7, 9,11ல் அமரும் போது நல்லது நடக்கும். 

கணவன்மனைவி உறவு நல்லது நடக்கும். விட்டுக்கொடுப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். பகை விலகும். நட்புகள் மலரும். உங்களின் ராசிக்கு 3வது ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். இளைய சகோதரர்கள் உறவு அதிகரிக்கும். 

9,12 ஆதிபத்தியம் வெளிநாட்டு பயணம் கைகூடும். இது அற்புதமான குரு பெயர்ச்சி.11வது ஸ்தானத்தை பார்க்கிறார் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். . எண்ணங்கள் பலிக்கும் என்ன நினைத்தாலும் பலிக்கும். மூத்த சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.  அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் கட்டுப்படும். ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும்.

 


ரிஷபம் - உடல்நலனில் அக்கறை 

துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். இந்த இடத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால்  கடன் வாங்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். 

ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு 10வது ஸ்தானத்தை பார்க்கிறார் வேலையில் இதமான சூழ்நிலை கிடைக்கும். பார்க்கும் இடம் நன்மை ஏனேனில் கர்ம ஸ்தானத்தை பார்வையிடுகிறார். 

12 இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் மனைவு ஒற்றுமை அதிகரிக்கும். தனகாரகன் தன ஸ்தானத்தை பார்க்கிறார். வரவை தாண்டி செலவு அதிகரிக்கும். சுப செலவாக மாற்றலாம். 

வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணியலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். மிதுனம் - பொற்காலம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம். ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். 11வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.

எண்ணங்கள் நிறைவேறும். மிதுனராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவார்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். கடகம்  - அல்லல் விலகும் 

கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் அல்லல் விலகும். 

ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். 12 இடமான அயன சயன இடத்தை பார்க்கிறார். 

அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் தடைகள் விலகும். கண்டங்கள் விலகி உடல் ஆரோக்கியம் ஏற்படும். 

குருவின் 7ஆம் பார்வை கர்ம ஸ்தானமான 10வது இடத்தின் மீது விழுவதால் நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். அங்கீகாரம் கிடைக்கும். 

12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவை அறிந்து செலவு செய்யவும். சுப விரையமாக செய்யவும். குரு பெயர்ச்சி நன்மையை அள்ளி வழங்கும். சிம்மம்  - ஆன்மீக பயணம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்கள் மீது அக்கறை தேவை. 

குரு பகவான் உங்களுக்கு 7வது இடத்தை 5ஆம் பார்வையாக பார்க்கிறார். 9வது இடத்தை 7ஆம் பார்வையாக பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தை பார்த்தால் தந்தையின் உடல் நலம் உண்டாகும். 

11வது இடத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் அல்லல்கள் விலகும். வாழ்க்கை துணைக்கு மகிழ்ச்சி. 
9ஆம்  பார்வை பார்ப்பதால் நீண்ட தூர பயணம் உண்டாகும். தர்ம ஸ்தானத்தை பார்ப்பதால் தான தர்மத்திற்கு செலவு. ஆன்மீக பயணம் உண்டாகும். தன லாபத்தை தரும். வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம்.கன்னி - தன லாபம்

குரு பகவான் கடந்த ஓராண்டாக ஜென்மத்தில் இருந்தார். இப்போது  2வது இடத்திற்கு செல்கிறார். இன்னல்கள் விலகும். தன வரவை அள்ளி வழங்கும். நல்ல குரு பெயர்ச்சி. 2வது இடத்தில் வாக்கு வன்மை பெருகும்.  

ராசிக்கு 6வது இடம், களத்திர ஸ்தானத்திற்கு மறைவு. கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும். 
7ஆம் இடத்திற்கு 12வது இடத்தை குரு பார்க்கிறார். குடும்ப ரகசியம் காக்க வேண்டும். 

8வது இடம் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். நோய் நொடிகள் விலகும். 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும். 
துலாம்  - ஜென்ம குரு 

துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும்.  வேலை பளு அதிகரிக்கும். 

உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும்.வெற்றி கிடைக்கும். பஞ்ச ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும். 

7வது இடத்தை பார்ப்பதால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும், திருமணம் கைகூடும். வெளிநாடு சுற்றுலா செல்லலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

9வது இடத்தை பார்ப்பதால் தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் வீட்டில் குரு அமர்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சகோதர உறவு சிறப்பாக இருக்கும். விருச்சிகம் - தடைகள் விலகும்

லாபஸ்தானத்தில் இருந்து குரு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். குருவின் பார்வை  4வது இடம், 6வது இடம் 8ஆம் இடத்தின் மீது படுகிறது. தடைகள் விலகும். நிறைய செலவுகள் ஏற்படும். விரையங்களை சுப விரையமாக மாற்றலாம்.

வீடு வாங்குகள், கடன் வாங்குகள். கடன் சேமிப்பு 4வது பார்வையாக கும்பத்தை பார்க்கிறார்.  மூட்டுவலி விலகும்.  நெருக்கடிகள் விலகும். 

நல்ல வீடு வாங்கலாம். மேற்படிப்பு படிக்கலாம். 6வது இடத்தை பார்ப்பதால் எதிரிகள் விலகுவார்கள். 8வது இடத்தை பார்வை படுவதால் நன்மைகள் உண்டாகும். கணவரின் வருமானம் அதிகரிக்கும். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.தனுசு - லாப ஸ்தானம் 

தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.  ஏழரை சனி நடந்தாலும் நன்மையே கிடக்கும்.

குரு பகவான் 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அதைப்போலவே பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.  

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 7வது இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது. மகரம் - தடைகள் விலகும்

குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம், வாக்குஸ்தானம். 4வது இடம், 6வது இடம் பார்வை படுகிறது. தனச்செழிப்பை அள்ளி வழங்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

4வது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் உயர் கல்வி கற்பதில் இருந்த தடைகள் விலகும். பட்டம் பெற்று சிறப்படைவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டு 6வது இடத்தை குருபகவான் பார்ப்பதால் நோய்கள் விலகும். 
கும்பம் - யோகம் 

அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பெயர்ச்சி மாபெரும் வரவாக அமைந்துள்ளது. 

சோர்வு நீங்கி மகிழ்ச்சி தென்படும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையானவை கிடைக்கும். தனச்செழிப்பு மனத்தெளிவை தரும். 

நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார். 

மூன்றாமிடத்தை 7ஆம் பார்வையாக பார்ப்பதால் இளைய சகோதரர்களுடன் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தினர் உறவு மேம்படும். தொடர்புகள் அதிகரிக்கும். மிகப்பெரிய பாராட்டு கிடைக்கும். 

பூர்வபுண்ணிய ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். உலகம் பாராட்டும் வகையில் வெற்றி கிடைக்கும் யோக காலமாகும். மீனம் - வெற்றி

மீன ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 

2வது இடமான தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தன வரவு ஏற்படும். ஆனால் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும். 

4வது இடத்தை குரு பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். 

வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

 

- குருபரன்