ராகு கேது பெயர்ச்சி; கோவில்களில் பக்தர்கள் பரிகாரம்

27 July 2017
K2_ITEM_AUTHOR 

தஞ்சாவூர்: ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருபாம்புரம் ஆகிய பரிகார தலங்களில் பக்தர்கள் தங்களின் ராசி நட்சத்திரத்தைக் கூறி பரிகாரம் செய்தனர். இன்று வியாழக் கிழமை ஜூலை 27,2017 ல் வாக்கியப் பஞ்சாங்கப்படி சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், சனி ஹோரையில், பகல் 12.39 மணிக்கு சிம்மம் ராசியில் இருந்து கடக ராசியில் ராகு பகவான் இடப்பெயர்ச்சியாகிறார்.

கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பகவான் மங்கள ராகுவாக எழுந்தருளி, தோஷங்களை நீக்கி, அருள்பாலிக்கிறார்.ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு பகவானுக்கு, 21 முதல் 24ம் தேதி வரை, முதல் கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை, இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடக்கிறது.

 

திருநாகேஸ்வரம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இங்கு தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். பரிகாரம் அர்ச்சனை திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். நாகநாதர் கோவிலில், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம்.கீழப்பெரும்பள்ளம் நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில், சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. கேது தலமான இக்கோவிலில், கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இது 1900 ஆண்டு பழமையான கோயிலாகும். கேது பகவானை வழிபட்டால் குழந்தைப்பேறு, திருமணத் தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ரு தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும்.

மகரராசியில் கேது கேது பகவான், கும்ப ராசியில் இருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் கேது பெயர்ச்சி வழிபாடு தொடங்கியது. முதல் கால யாக பூஜை, மகாபூர்ணாஹூதி நடக்கிறது.சிறப்பு அபிஷேகம் இன்று காலை 2ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு கேது பகவானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சரியாக 12.48 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. திருபாம்புரம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு, கேது ஸ்தலமாகும் கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருள்கிறார். ஏக சரீரமாகி, ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. இங்கு நடைபெற்ற லட்சார்ச்சணையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.